Monday, February 23, 2015

சாமுராய் - மூங்கில் காடுகளே

படம் : சாமுராய்
பாடலாசிரியர்: வைரமுத்து

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
ஹொ ஹொ ஹொ

இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பார்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுதாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொரியும்
தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபலீயங்கள் காணேனோ
மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ
லய்லொ முயலொ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ

உப்பு கடலோடு மேகம் உற்பதி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்த போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டிது கொள்கிறதே
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆள்வேனோ
ஜனனம் மரணம் தெரியா வண்ணம்
நானும் மழை துளி ஆவேனோ

Thursday, February 19, 2015

சலங்கை ஒலி - மௌனமான நேரம்

படம் : சலங்கை ஒலி
பாடலாசிரியர் : வைரமுத்து

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ

பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலென்ன நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

Wednesday, February 18, 2015

பயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா

படம் : பயணங்கள் முடிவதில்லை
பாடலாசிரியர் : வைரமுத்து

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே (2)

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும் (2)

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ (2)

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே.

Tuesday, February 17, 2015

அனேகன் - டங்க மாரி

படம் : அனேகன்
பாடலாசிரியர் : Rokesh

டங்க மாரி ஊதாரி புட்டுக்கின்னா நீ நாரி
ரூட்டு எடுத்து கோடு போட்டேன்
கோடு மேல ரோடு  போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
அழுக்கு மூட்ட மீனாட்சி மூஞ்ச கழுவி நாளாச்சி
ஒத்த பல்ல வெளக்காம சோத்த தின்னு காமாட்சி
இதுங்க கிட்ட மாட்டிக்கின்னா நின்னுடுண்டா உன் மூச்சு
ஆட போனா மங்காத்தா தொரத்தினு வருது எங்காத்தா
நாத்தம் புடிச்ச நாஷ்டா கட துண்டாகத்தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்பவட வாங்கி துண்ட்டு சும்மா கெட
திருடாத பொருள நான் எடுத்திடுவேன் விரல
நீ தூக்காதடா பொருள உன்ன அடிச்சிடுவேன் மிரள
அதார் உதார் தறுதல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சீட்ட கைய போட்டுத்தள்ளு பேர வாங்கிட்டேன்
ஆப்பனட்டான ஆளே இல்ல நான் சோலே ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்
சுண்ட கஞ்சி பட்ட தண்ணி ரம்மும் ராவா குடிச்சான் பன்னி
அண்டா குண்டான் அடகு வச்சி சாராயத்த புல்லா குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஒடச்சி கெடுத்துக்காதே லைப்ப மச்சி
துட்டு இருந்தா காஜா பீடி துட்டு இல்லாட்டி துண்டு பீடி
கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கினு வலி வலின்னு வலிஞ்சிக்கின்னு
பாக்கி பேர வாங்கிகின்னு உடம்ப வீணா கெடுத்துக்கின்னு
கல்யாணம் தான் பண்ணிக்கினு செட்டப்பையும் வச்சுக்கினு
பொண்டாட்டிய கழுவிவிட்டு புள்ளைங்கள மறந்துபுட்டு
இருக்காதடா வெக்கங்கெட்டு போய்டுவ மானங்கெட்டு
பலான கைரேக அத லுக்கு விடும்சோக்கா
உன்னை ஆக்கிடும்டா பேக்கா நீ கழட்டிக்கோடா நேக்கா
பொண்ணுங்கள கேவலமா என்னாத மச்சி
உன் கூட வந்து பொறக்கலையா அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு தேடிவரும் உன்ன நெனச்சி
நீ அக்கா பொண்ண விட்டு மாறாத கட்சி
கண்ட கண்ட பார்வதிய மாத்திக்கலியே
மாலதிய தள்ளித்தான் ரேவதிய ஓடவிட்டேன்
கோமதிய பிகருங்க கொடுத்துடுமா
தீக்காதான் நான் மாட்டிக்காம காட்டிக்காம நேக்காதான்
இவ பார்த்ததுமே ஆக்கிவிட்டான் சீக்காதான்
என்ன மயங்கவுட்டு மாட்டினியே பேக்காத்தான்
ஒத்த கண்ண உருட்டிக்கினு
கொண்ட பூ வச்சிக்கினு பொடவையத்தான் கட்டிக்கினு
கண்ணால வல விரிச்சா கண்ணம்மா
உன்ன கண்ணு புட்ட கன்னி பையன் நானம்மா
உன் காதலன்தான் நான் சொல்லம்மா
நீ சொல்லாங்காட்டி செத்த பொணம் நானம்மா